உலகில் முதல்முறையாக ரோபோ அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை

  • IndiaGlitz, [Tuesday,April 09 2019]

ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை செய்தது ஒரு ரோபோ என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோவால் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் தற்போது அவர் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

உலகிலேயே ரோபோவால் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது இதுதான் முதல் முறை. இந்த பெண் கர்ப்பமான பின்னர் 36 வாரங்கள் கழித்து சிசேரியன் முறையில் குழந்தை பெற்றதாகவும், இந்த குழந்தை 2.9 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனை உலக விஞ்ஞானத்தில் அடுத்த கட்டம் என்றும், இதுவொரு அதிசயமான சாதனை என்றும் இந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தி உலக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது
 

More News

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

தமிழகத்தில் 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த ஆளை தூக்குல போடுங்க: நடிகை வரலட்சுமி ஆவேசம்

நடிகை வரலட்சுமி சமூக சேவைகளில் ஆர்வமுள்ளவர் என்பதும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 

ஏன் இவ்வளவு சத்தம்? ரஜினி பேட்டி குறித்து குஷ்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை மும்பையில் நடைபெறவுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், ரஜினி ஆதரவு தருவேன் என்று கூறியிருப்பதாகவும், அவர் ஆதரவு தருவார் என்று நம்புவதாகவும்