சாலையில் கிடந்த தங்கநகை: காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளருக்கு வெகுமதி
- IndiaGlitz, [Saturday,April 24 2021]
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் கிடந்த ஒரு சவரன் தங்க நகையை J9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் ராணி என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளி ராணி. இவர் பெருங்குடி, ராஜிவ்காந்தி நகர் 4வது தெருவில் உள்ள பூங்கா அருகே துப்புரவு பணி மேற்கொண்டிருந்தபோது, தெருவில் சுமார் ஒரு சவரன் எடை கொண்ட தங்கச்சங்கிலியை கண்டார். பின்னர் தங்கச்சங்கிலி குறித்து அக்கம்பக்கத்தில் கேட்டபோது, யாரும் உரிமை கோராததால், ராணி மேற்படி தங்கச்சங்கிலியை அவரது மேற்பார்வையாளருடன் J9 துரைப்பாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணனிடம் ஒப்படைத்தார்.
சாலையில் கிடந்த தங்க நகைகளை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி ராணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும் பெண் துப்புரவு பணியாளர் ராணிக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கொருக்குபேட்டையைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்ற தூய்மை பணியாளர் குப்பைகளை தரம்பிரித்து கொண்டிருந்தபோது பத்து பவுன் நகை இருப்பதை பார்த்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் என்பதும், அதன் காரணமாக பெண் ஒருவரின் திருமணம் நடக்க காரணமாக இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் கிடந்த 1 சவரன் தங்க நகையை J9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் ராணி என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் (23.04.2021).https://t.co/19spP4JzEo
— GREATER CHENNAI POLICE (@chennaipolice_) April 23, 2021
1/2 pic.twitter.com/y3ewJ8sRVd