ஒரு சண்டை கூட போடவில்லை: விவாகரத்துக்கு மனைவி கூறிய அதிர்ச்சி காரணம்

  • IndiaGlitz, [Sunday,August 23 2020]

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான 18 மாதங்களில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தனது கணவர் இந்த ஒன்றரை வருடங்களில் தன்னிடம் ஒரு சண்டை கூட போடவில்லை என்ற காரணத்தைக் கூறி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவரது கணவர் அவர் மீது மிகவும் அன்பாக இருப்பார் என்றும் சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு கூட அவர் உதவி செய்வார் என்றும் தெரிகிறது. மேலும் அந்தப் பெண் என்ன தவறு செய்தாலும் அவரது கணவர் அவரை திட்ட மாட்டாராம், எல்லா தவறுகளையும் மன்னித்து அவரை அன்புடன் கவனித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

கணவரின் அதீத அன்பு அந்த பெண்ணுக்கு அலுப்பு தட்டியது. இதையே காரணமாகக் கூறி தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதில் ஒரு பெரிய பியூட்டி என்னவென்றால் இந்த விவாகரத்துக்கும் அவரது கணவர் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது தான். ஆனால் நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் மனுவை நீதிபதி நிராகரித்தார். அந்த பெண் கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

மேலும் அவர் நீதிமன்றத்தை அடுத்து உள்ளூர் பஞ்சாயத்தில் இந்த பிரச்சனையை கொண்டு சென்றதாகவும், அங்கும் பஞ்சாயத்தார் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஓவர் அன்பு காரணமாக ஒரு பெண் விவாகரத்து கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அற்புதமான கூட்டணி: உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'சைக்கோ' திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'கண்ணை நம்பாதே' 'ஏஞ்சல்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்

திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு: திரையுலகினர் குஷி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

போனிகபூரின் அடுத்த தமிழ்ப்படம்: ஹீரோ, இயக்குனர் அறிவிப்பு

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராகிய போனிகபூர், முதன் முதலாக அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தை தயாரித்தார் என்பதும்,

விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித்துக்கு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?

நேற்று உலகம் முழுவதும் இந்து மக்களால் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் உள்ளூர் தலைவர்கள் முதல் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வரை இந்து மத மக்களுக்கு

ஆங்கிலம் தெரியாதவர் எதற்கு பாடம் நடத்துகிறார்? விஜயகாந்த் ஆவேசம்

சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழ் மருத்துவர்கள், ஆயுஷ் செயலர் ராஜேஷ் கொடேஜாவிடம் தங்களுக்கு