பிரமாண்டமாக தயாராகும் 'ராமாயணா': சீதை, ராவணன் வேடங்களில் தென்னிந்திய நட்சத்திரங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,December 13 2023]

ராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாசங்களை திரைப்படமாக எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிலையில் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ராமர், ராவணன் மற்றும் சீதை கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் சீதை மற்றும் ராவணன் கேரக்டர்களில் தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதாவது சீதை கேரக்டரில் சாய் பல்லவி, ராவணன் கேரக்டரில் யாஷ் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அனிமல்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்த ரன்பீர் கபூர், ராமர் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நிதிஷ் திவாரி என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் 2025 ஆம் ஆண்டு இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. உலக தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

ரூ.6000 வெள்ள நிவாரண நிதி யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசின் அரசாணை..!

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்

'விடாமுயற்சி' படத்தில் இணையும் மகிழ்திருமேனியின் முந்தைய பட பிரபலம்..! அஜித்துக்கு வில்லனா?

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான முந்தைய திரைப்படமான 'கலகத்தலைவன்' என்ற படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்து உள்ளதாகவும்

எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? லோகேஷ் கனகராஜ் கூறிய விளக்கம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம்  ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை அடுத்து அமைச்சர் உதயநிதியை சந்தித்த பிரபல நடிகர்.. ரூ.10 லட்சம் நிவாரண நிதி..!

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக அளித்த நிலையில் இன்னொரு பிரபல நடிகரும் அதே தொகையை கொடுத்துள்ளார்.