சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த உலகக்கோப்பையை வென்ற கிரிக்கெட் வீரர்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்தனர் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ரஜினியை சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை பெற்று தந்தவர் அன்றைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் வர்ணனையாளராக சில ஆண்டுகள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களை ரஜினிகாந்த் மற்றும் கபில்தேவ் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

ரஜினியுடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த கபில்தேவ் ’ஒரு மிகப்பெரிய மனிதரை சந்தித்ததில் தனக்கு பெரும் பாக்கியம்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றமா? மாணவர்கள் குஷி..!

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் விருந்து சாப்பிட்ட 80s நடிகைகள்.. வீடியோ வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் 80s நடிகைகள் மூன்று பேர் விருந்து சாப்பிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

2024ல் பாராளுமன்றம், 2028ல் சட்டமன்றம்.. விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

 மதுரையில் உள்ள விஜய ரசிகர் மன்றத்தினர் 2024 பாராளுமன்றமே, 2026 சட்டமன்றமே என்ற வாசகங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பருத்திவீரன்' திரைப்பட நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

 கார்த்தி, பிரியாமணி  நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான 'பருத்திவீரன்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் 3 முன்னணி நாயகிகள்.. இதுவரை இல்லாத பெரிய பட்ஜெட்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது ’இறைவன்’ ’சைரன்’ மற்றும் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி வரும் பட என பிசியான நடிகராக உள்ளார்