close
Choose your channels

'கே.ஜி.எஃப் 2' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

Thursday, March 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான ’கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

’கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 168 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணிநேரம் 48 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியுள்ள 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment