'கேஜிஎஃப் 2' படக்குழு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,March 03 2022]

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎஃப் 2’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’கேஜிஎஃப் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் விழாவை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

முதல்கட்டமாக ’கேஜிஎஃப் 2’ படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’கேஜிஎஃப் 2’ படக்குழுவினரின் இந்த மாஸ் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய்தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே ஒரு புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்த விஜய்யின் தந்தை!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ ஏ சந்திரசேகர் ஒரே ஒரு புகைப்படத்தை மனமுடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் 'விக்ரம்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ்

எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க: குஷ்புவை செல்லமாய் கண்டித்த டிடி!

எங்கள் டைரக்டர் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார், அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று வீடியோ காலில் குஷ்புவிடம் டிடி செல்லமாக கோபித்துக் கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பூஜை: எதற்காக தெரியுமா?

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் திடீரென நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பூஜை நடத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸின் முக்கிய அறிவிப்பு!

 உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருப்பது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .