யாஷ் நடித்த 'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 'பீஸ்ட்' படத்துடன் மோதுகிறதா?

  • IndiaGlitz, [Saturday,January 08 2022]

பிரபல நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’கேஜிஎப் 2’ திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உள்ளது என்பதும் அந்த படத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ், சஞ்சய்தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் கேஜிஎப் 2’ மற்றும் ‘பீஸ்ட்’ மோதுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தர்புகா சிவா இயக்கத்தில் 'முதல் நீ முடிவும் நீ': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான 'முதல் நீ முடிவும் நீ' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகேஷ்பாபு, த்ரிஷாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகரின் மகளுக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சத்யராஜ் அனுமதி: என்ன ஆச்சு?

 பிரபல நடிகர் சத்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சுசி கணேசன் இயக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர்: ஆச்சரிய அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மாஸ் நடிகருடன் இணைந்த விஷ்ணுவிஷால்: வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால் மாஸ் நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து, அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.