close
Choose your channels

சுசி கணேசன் இயக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர்: ஆச்சரிய அறிவிப்பு!

Friday, January 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சுசி கணேசன், ’திருட்டு பயலே’ ’கந்தசாமி’ ’திருட்டுப்பயலே 2’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ’வஞ்சம் தீர்த்தாயடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சுசி கணேசனின் முந்தைய படங்களுக்கு பரத்வாஜ், வித்யாசாகர், தேவிஸ்ரீ பிரசாத், தேவா உள்ளிட்டோர் இசையமைத்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் இசைஞானி இளையராஜாவுடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos