முடிவுக்கு வந்தது 'முரட்டு குத்து' புகழ் யாஷிகா ஆனந்தின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Saturday,June 09 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வசனம் தான் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வசனத்தையே டைட்டிலாக வைத்து ஒரு திரைப்படத்தை யூடியூப் புகழ் 'எருமைச்சாணி' குழுவினர் தயாரித்து வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.

விஜய்குமார், சத்யமூர்த்தி, ஹரிஜா, கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசரை ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிளாப் போர்டு புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கெளசிக் க்ரிஷ் இசையில் ஜோஸ்வா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது.

More News

அஜித் படத்தை பாராட்டிய விஜய் பட வில்லன்

அஜித், நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம். ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட இந்த படம் சமீபத்தில் 'வீர்' என்ற பெயரில் இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிராக் லிஸ்ட் வெளியீடு

விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. தொலைக்காட்சி சீரியலுக்கு அடிமையாகி இருந்தவர்கள்

'விஜய் 62' படத்தில் 'விக்ரம் வேதா' நடிகர்

விஜய் நடித்து வரும் 'விஜய் 62' திரைப்படத்தின் படப்பிடிப்பை ஏ.ஆர்.முருகதாஸ் விறுவிறுப்புடன் நடத்தி வருகிறார். தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் அரசியல் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

'கோலி சோடா'வுக்காக கொடி பிடித்த சூர்யா

இயக்குனர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கோலி சோடா 2' படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.