முதலிடத்தில் யாஷிகா, கடைசி இடத்தில் ஐஸ்வர்யா! சிண்டுமூட்டும் பிக்பாஸ்

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறுபேர் மட்டுமே இருப்பதால் இந்த ஆறு பேர்களை வைத்து ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சியை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆறு பேர்களுக்கு இடையே சிண்டுமுட்டும் வேலையில் பிக்பாஸ் இறங்கியுள்ளார்.

போட்டியாளர்களான ஆறு பேர்களில் ஒன்று, இரண்டு என ஆறு வரை போட்டியாளர்களுக்குள் பேசி வரிசைப்படுத்த வேண்டும் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் நேற்று கொடுத்துள்ளார். ஆறு பேர்களுமே முதலிடத்தை தான் விரும்புவார்கள் என்றும் யாரும் ஆறாவது இடத்தை விரும்ப மாட்டார்கள் என்று தெரிந்தும் பிக்பாஸ் இந்த டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

முதலிடத்திற்காக யாஷிகா, ஜனனி இடையே கடும் போட்டி நடந்தது. முதல் நாளில் இருந்து தான் அனைத்து டாஸ்க்கையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வருவதாக யாஷிகாவும், தன்னாலும் டாஸ்க்குகளை செய்ய முடியும் என்பதை கோல்டன் டிக்கெட் வாங்கி நிரூபித்ததாக ஜனனியும் வாதாடினர். பின்னர் மற்றவர்களின் கருத்திற்கேற்ப யாஷிகாவிற்கு முதலிடம் கிடைத்தது.

ஆனால் இரண்டாவது இடத்திற்கு கடும் போட்டி நடந்தது. ஜனனி, ரித்விகா, விஜி, ஆகியோர்களிடம் இரண்டாவது இடத்திற்காக ஐஸ்வர்யா கடுமையாக வாதாடினார். இறுதியில் தனக்கு இரண்டாவது இடம் கிடைக்காது என தெரிந்ததும் தான் ஆறாவது இடத்தை ஏற்றுக்கொள்வதாக ஐஸ்வர்யா கூறினார். ஒரு காரியத்தை சாதித்து கொள்ள ஒன்று கோபப்படுவது அல்லது அழுவது ஆகிய இரண்டு யுக்திகளை ஆரம்பம் முதலே பின்பற்றி வரும் ஐஸ்வர்யா இந்த டாஸ்க்கில் இரண்டையும் பயன்படுத்தினார்

இறுதியில் பல்வேறு பிரச்சனைகள், வாக்குவாதங்களுக்கு பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, பாலாஜி மற்றும் கடைசி இடத்தில் ஐஸ்வர்யாவும் தேர்வு பெற்று அவர்களுக்குரிய இடத்தில் நின்றனர். இது அவர்களே நியமித்த தரவரிசை என்றாலும் மக்கள் முடிவு செய்துள்ள தரவரிசை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

வைபவ்-நந்திதா ஜோடி சேரும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய வைபவ் நாயகனாக நடிக்கும் படத்திற்கு 'டாணா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நந்திதா நடிக்கவுள்ளார்.

மீண்டும் கள்ளாட்டம், மோசமான யுக்தி: திருந்தாத ஐஸ்வர்யா

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஐஸ்வர்யா இதுவரை பெரும்பாலான டாஸ்க்குகளில் ஒன்று கள்ளாட்டம் அல்லது அழுகுனி ஆட்டம் ஆடி வருவதால் பார்வையாளர்கள்

ஒரே நேரத்தில் 4 திரைப்படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை என்ற தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் 4 திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய சூர்யா

நடிகர் சூர்யா சமூக அக்கறையுடன் பல ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார் என்பது தெரிந்ததே.

நீட் தேர்வு: மருத்துவ மாணவர்களை அடுத்து நர்ஸிங் மாணவர்களுக்கும் ஆப்பு

மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.