ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலுக்கு வேற லெவல் போஸ் கொடுக்கும் யாஷிகா!

  • IndiaGlitz, [Thursday,December 30 2021]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த பாடலுக்கு சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் இளைஞர்களை சுண்டி இழுத்தது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக நடிகை ஆன்ட்ரியாவின் குரலில் ஒலித்த இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது என்பதும் இந்த படம் தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை பெற இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஒரு சில நடிகைகள் நடனமாடி தங்களது சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா இந்த பாடலுக்கு வேற லெவல் போஸ் கொடுத்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நிகழ்ந்த விபத்தின் காயத்திலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சரியாகிடும் தம்பி, எல்லாம் சரியாகிடும்: நிரூப்புக்கு பல்பு கொடுத்த ராஜூ!

ராஜு மற்றும் பிரியங்கா மீது நிரூப் குற்றம் சுமத்திய போது, 'சரியாகிவிடும் தம்பி எல்லாம் சரியாகிவிடும்' என கேலியாக ராஜூ பதில் சொன்ன காட்சி இன்றைய புரமோவில் உள்ளது.

ஐசிசி விருது பட்டியலில் தமிழக வீரர்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐசிசி 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களின் பட்டியலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்து

ஜாலியா ஆட்டோ ரிக்சா ஓட்டிய சல்லுபாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் மும்பை நகர் சாலையொன்றில் ஆட்டோ ரிக்ஷா

தனுஷின் 'வாத்தி' படப்பிடிப்பு எப்போது?

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி  இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு 'வாத்தி' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் வெளிவந்த தகவலை

கார்த்தி-லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' படம் குறித்த சூப்பர் தகவல்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்தின் இறுதியில் அடுத்த பாகம் உருவாகும் வகையில் காட்சிகள்