close
Choose your channels

ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலுக்கு வேற லெவல் போஸ் கொடுக்கும் யாஷிகா!

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த பாடலுக்கு சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் இளைஞர்களை சுண்டி இழுத்தது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக நடிகை ஆன்ட்ரியாவின் குரலில் ஒலித்த இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது என்பதும் இந்த படம் தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை பெற இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஒரு சில நடிகைகள் நடனமாடி தங்களது சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா இந்த பாடலுக்கு வேற லெவல் போஸ் கொடுத்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நிகழ்ந்த விபத்தின் காயத்திலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.