யாஷிகாவின் வெறித்தனமான வொர்க்-அவுட்: வேற லெவலில் வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,August 20 2022]

நடிகை யாஷிகா வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான ’கடமையை செய்’ என்ற திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது அவர் 6 திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ‘இலக்கை அடைய வெறித்தனமான பிட்னஸ்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லைகாவின் 'பொன்னியின் செல்வன்': ஆதித்த கரிகாலனின் 'சோழா சோழா' பாடல் ரிலீஸ்

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும்

தவறு தான், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: 'விருமன்' பிரபலம் பேட்டி!

கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவான திரைப்படம் 'விருமன்' சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

சூர்யா-திஷா பதானி ஏற்கனவே இணைந்து நடித்திருக்கின்றார்களா? வைரல் வீடியோ!

சூர்யா நடிக்க இருக்கும் 42வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

நயன்தாராவின் புதிய டாட்டூ, எந்த இடத்தில் தெரியுமா? வைரல் புகைப்படம்!

 லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் புதிய டாட்டூவை ரசிகர்கள் கண்டுபிடித்து அதனை இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட விஜய் பட நடிகை: குழந்தைகள் புகைப்படம் வைரல்!

விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கணவர் குழந்தையுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட நிலையில் அவர் குடும்பத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.