ஜனவரி 25 ரிலீஸ் பட்டியலில் இணைந்த யோகி பாபு படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,January 07 2024]

வரும் பொங்கல் தினத்தில் 'அயலான்’ ’கேப்டன் மில்லர்’ ’மிஷன் சாப்டர் ஒன்’ மற்றும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் குடியரசு தின விழா விருந்தாக ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள் கொடுத்த பட்டியலை பார்த்தோம்.

ஜனவரி 25ஆம் தேதி ’சிங்கப்பூர் சலூன்’ ’ப்ளூ ஸ்டார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ‘ரிபல்’, ‘டிமாண்டி காலனி 2’ உள்பட ஒரு சில படங்களும் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி 25ஆம் தேதி யோகி பாபு நடித்த ’தூக்குத்துரை’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யோகி பாபு நடித்த ’ட்ரிப்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் ’தூக்குதுரை’ படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். யோகிபாபு ஜோடியாக இனியா நடிக்கும் இந்த படத்தில் பாலசரவணன், மொட்ட ராஜேந்திரன், மகேஷ் சுப்பிரமணியம், செண்ட்ராயன், உள்பட பலர் நடித்து உள்ளனர். ரவிவர்மா ஒளிப்பதிவில் தீபக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கேஎஸ் மனோஜ் என்பவர் இசையமைத்துள்ளார், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன,.

More News

பணப்பெட்டியை எடுத்த பூர்ணிமாவை விட விசித்ராவுக்கு அதிக சம்பளமா? எத்தனை லட்சம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னருக்கு அடுத்தபடியாக பூர்ணிமாவுக்கு தான் அதிகப்படியான பணம் கிடைத்ததாகவும் அவருக்கு சம்பளமாக 14 லட்சம் பண பெட்டி மூலம் 16 லட்சம்

ஜனவரி 26ல் வெளியாகும் 4 படங்கள்.. அடுத்த வாரத்திலேயே வரும் சந்தானம் படம்..!

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விருந்தாக 4 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த வாரம் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ்

குளிர் காய்ச்சலா? சூரியன் பக்கத்துல வாங்க.. கலைஞர் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்த சம்பவம்..!

நேற்று 'கலைஞர் 100' என்ற விழா சிறப்பாக நடந்ததை அடுத்து இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடைசி வாரத்திலும் காலை வாரும் போட்டியாளர்கள்.. தனித்திறமை பற்றி கூறுவதில் சர்ச்சை..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையிலும் கூட போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் காலை வாரும்  காட்சி இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.

யார் வெளியே போவார்கள் என சரியாக கணித்த தினேஷ்.. விஷ்ணு சொன்னது என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்தது. அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் மாயா குறைந்த