ஜனவரி 26ல் வெளியாகும் 4 படங்கள்.. அடுத்த வாரத்திலேயே வரும் சந்தானம் படம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விருந்தாக 4 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த வாரம் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி ஆர்.ஜே பாலாஜி நடித்த ’சிங்கப்பூர் சலூன்’ அசோக் செல்வன் நடிப்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’ப்ளூ ஸ்டார்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜீவி பிரகாஷ் நடித்த ’ரிபல்’ மற்றும் அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி 2’ ஆகிய படங்களும் அதே தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.
இது மட்டுமின்றி ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான ’ஃபைட்டர்’ மோகன்லால் நடிப்பில் உருவான ’மலைக்கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களும் ஜனவரி 26ல் ரிலீஸ் ஆகவுள்ளன. மேலும் ரஜினிகாந்தின் ’லால் சலாம்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய திரைப்படங்களும் சரியான ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந்த நிலையில் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படமான ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படம் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார்.
அடுத்தடுத்து பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.