'நான் சொல்றதை கட் பண்ணாம போடுங்க.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யோகிபாபு..!

  • IndiaGlitz, [Tuesday,August 29 2023]

காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த ’லக்கிமேன் என்ற திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் இன்று செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஒரு கட் பண்ணாம போடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்

’லக்கி மேன்’ என்ற இந்த படத்தில் நடித்தவர்கள், பணிபுரிந்தவர்கள் எல்லோரும் உண்மையில் லக்கிமேன்கள் தான். இப்படி ஒரு கதை அமைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

வாழ்க்கையில் நான் மிகவும் அன்-லக்கியாகத்தான் சுற்றி கொண்டிருந்தேன். சினிமாவுக்கு வந்த 23 வருடங்கள் ஆகிறது. இந்த 23 வருடத்தில் எனக்கு சமீபகாலமாகத்தான் நல்ல இயக்குனர்கள் சேர்ந்துள்ளதால் லக்கி ஆகியுள்ளேன். இந்த படம் எனக்காகவே செய்தது போல் உள்ளது.

மேலும் இப்போது நான் ஒரு விஷயம் சொல்கிறேன் தயவுசெய்து கட் பண்ணாம போடுங்கள் என்று கூறிய அவர் ’எனக்கு சோறு போட்டது காமெடி தான், கடைசி வரைக்கும் நான் காமெடியனாக தான் தமிழ் சினிமாவில் இருப்பேன். மற்ற மொழிகளிலும் காமெடி கேரக்டருக்கு என்னை அழைக்கிறார்கள், அதிலும் நடிக்க உள்ளேன்.

ஆனால் அதே நேரத்தில் பாலாஜி மாதிரி, அஸ்வின் மாதிரி ஒரு சில இயக்குனர்கள் என்னை வைத்து நல்ல கதையோடு வரும்போது என்னால் தட்ட முடியவில்லை, அந்த ஒரு சில படங்களில் மட்டும் நான் ஹீரோவா நடிக்கிறேன், ஆனால் கண்டிப்பாக நான் கடைசிவரை காமெடியாக தான் நடிப்பேன், காமெடி தொழிலை நான் விட்டு விட மாட்டேன்’ என்று கூறினார்.

யோகி பாபு, வீரா, ரெபாக்கா, ஆர்எஸ்வாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’லக்கி மேன்’ படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். வீரா இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சீன் ரோல்டன் இசையில், சந்தீப் விஜய் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையா? நடிகை வரலட்சுமி விளக்கம்..!

நடிகை வரலட்சுமியிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஷாருக்கான் - நயன்தாராவின் செம டான்ஸ் பாடல்.. 'ஜவான்' வீடியோவை வெளியிட்ட அட்லி..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்  நடித்த 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.  

என் டிரஸ்ட்டுக்கு இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம்: ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்..!

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் 'இனிமேல் எனது டிரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம்' என்று வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

முன்பு குரூப் போட்டோ.. இப்போது குரூப் உடன் போட்டோ.. பேருந்து பணிமனைக்கு ரஜினியின் திடீர் விசிட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு பெங்களூரில்  அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டக்டர் ஆக வேலை செய்த நிலையில் தற்போது தான் பணிபுரிந்த பேருந்து

யாரும் முன்வரவில்லை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வீட்டை தைரியமாக வாங்கிய சிம்பு பட நடிகை..!

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இருந்த மும்பை வீட்டை சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.