8 வருடத்திற்கு முன் 4 நாட்கள் மட்டுமே நடித்த படம்: யோகிபாபு

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகிபாபு பெரும்பாலான படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தாலும், ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவர் முக்கிய வேடங்களில் நடித்த தர்மபிரபு, ஜாம்பி, கூர்கா’ போன்ற படங்கள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ’பட்லர் பாபு’ என்ற படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும், அவர்தான் இந்த படத்தின் ஹீரோ என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை யோகிபாபு மறுத்துள்ளார். ’பட்லர் பாபு’ என்ற படத்தில் தான் எட்டு வருடங்களுக்கு முன் நான்கே நான்கு நாட்கள் மட்டும் நடித்து கொடுத்ததாகவும், அந்த படத்தில் தான் காமெடி கேரக்டரில் மட்டும் நடந்திருப்பதாகவும், ஹீரோ கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் தனக்கு யாரும் வசனம் எழுதித் தரவில்லை என்றும் தானே தனது காமெடி காட்சிகளுக்கான வசனத்தை எழுதிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதிர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கர், மயில்சாமி, தாடி பாலாஜி, உள்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசையில் உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளது

 

More News

'பிகில்' டீசர் ரிலீஸ் குறித்த புதிய தகவல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள்,

தீபாவளிக்கு மும்முனை போட்டி: பிகில், கைதியுடன் இணைந்த மாஸ் படம்

வரும் தீபாவளித் திருநாளில் விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமல் பல்டி அடிச்சாலும் அவர் நினைத்தது மட்டும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

கடந்த சில நாட்களாக அதிமுக அரசு குறித்து கமல் பேசுவதும், அதற்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி தருவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகர் திடீர் விலகல்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது

சாண்டியை உணர்ச்சிவசப்பட்டு அழவைத்த பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிவடையும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால்