நீங்கள் லாட்டரியில்கூட வெல்லலாம்… ஆனால் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது…பீதியை கிளப்பும் WHO!!!

 

உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அதிர்ச்சி ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் நீங்கள் லாட்டரியில்கூட ஜெயித்து விடலாம் கொரோனாவிடம் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மைக் ரியான், தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய்ப்பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60-70% மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் உலக மக்கள் தொகையில் 200 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதுவரை உலகில் 3 கோடி பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும் 9 லட்சம் மக்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். கடந்த ஜனவரியில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு தற்போது வரை கட்டுப்படுத்த முடியாத நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் துரித வேகத்தில் நடைபெற்று வந்தாலும் இதுவரை எந்த தடுப்பூசி ஆய்வுகளும் முடிவான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது பதட்டத்தை வரவழைக்கிறது.

இந்நிலையில் உலகின் நம்பிக்கையான கொரோனா தடுப்பூசியாகக் கருதப்பட்ட ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பூசிக்கான சோதனை கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. காரணம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இம்மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பரிசோதனைகள் தொடரப்பட்டு இருக்கின்றன.

மேலும், உலகின் முக்கியமான இன்னொரு கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 இருந்து வருகிறது. ஆனாலும் இத்தடுப்பூசி பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியுலகில் சமர்பிக்க படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இம்மருந்து 14% மக்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இப்படியான நெருக்கடி சூழலில் தற்போது உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் உலகில் உள்ள 200 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது. கொரோனா தடுப்பூசியை நாம் விரைவில் கண்டுபிடித்து பயன்படுத்தா விட்டால் நிலைமை மோசமாகிவிடும் எனவும் எச்சரித்து இருக்கிறார். இதனால் மேலும் பதட்டமான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜிவி பிரகாஷ் படத்தில் இணைந்த இயக்குனர் மிஷ்கின்?

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

சாலையில் மட்டுமல்ல இனிமேல் கேரளாவில் தண்ணீரிலும் டாக்சி ஓடும்… விறுவிறுப்பான தகவல்!!!

கேரள மாநிலத்தில் நீர் நிலைகள் அதிகமாகக் காணப்படுகிறது. அதேநேரத்தில் நீர் நிலைகளை ஒட்டிய சுற்றுலாத் தளங்களும் அங்கு அதிகம்

ரஜினியின் ஆடியோ கேட்டதும் அதிசயம், அற்புதம் நடந்தது: ரசிகரின் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர் ஒருவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் மற்றும் சிறுநீரக நோய்கள் இருந்ததால்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இணைந்த ஆங்கர் அர்ச்சனா!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே.

எனது இதயமே நொறுங்கி விட்டது: காயத்ரி ரகுராமன் இரங்கல் அறிவிப்பு 

பாஜக பிரமுகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரின் மறைவை கேட்டு இதயமே நொறுங்கி விட்டது