சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்!

  • IndiaGlitz, [Friday,June 21 2019]

கடந்த வெள்ளிக்கிழமையன்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 8 மணியளவில் தேன்மொழி என்ற இளம் பெண்ணும் அவரது காதலர் என்று கூறப்படும் சுரேந்தா் என்பவரும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களது வாக்குவாதம் முற்றியது. அந்த நேரத்தில் ஆத்திரம் அடைந்த சுரேந்தா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டிவிட்டு, அந்த பக்கமாக வந்த ரயில் முன் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த சுரேந்தர், தேன்மொழி ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தேன்மொழி குணமடைந்து வந்த நிலையில் சுரேந்தர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் சற்றுமுன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை சென்னை எழும்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானம் நடித்த 'A1' ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வசூலை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான அடுத்த படமான ''A1''

தமிழ்நாடே கடனில் தான் உள்ளது: ஏலம் குறித்து பிரேமலதா விளக்கம்

ரூ.5 கோடி வங்கியில் கடன் வாங்கி திரும்ப கட்டாததால் விஜயகாந்தின் ஒருசில சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளதாக வங்கி ஒன்று இன்றைய நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பேராசை பெருநஷ்டம்: விஜயகாந்த் நிலைமைக்கு யார் காரணம்?

150 திரைப்படங்கள், அத்தனையும் தமிழில் மட்டுமே என்ற பெருமை விஜயகாந்தை தவிர வேறு எந்த நடிகருக்கும் இல்லை. அதேபோல் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர்.

நடிகர் சங்க தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு!

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த தேர்தலை ரத்து செய்ய பதிவாளர் உத்தரவிட்டார்.

ராஜராஜ சோழன் விவகாரத்தில் ரஞ்சித் கைதா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித், சோழமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பேசினார்.