close
Choose your channels

ஒரே நேரத்தில் 2 மனைவிகளும் கர்ப்பம். பிரபல யூடியூபரின் போட்டோஷூட் வைரல்

Sunday, December 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல யூடியூபரின் இரண்டு மனைவிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆனதை அடுத்து இரண்டு மனைவிகளுடன் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அர்மான் மாலிக். இவரது யூடியூப் சேனலில் 20 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பதும் யூடியூப் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூடியூபர் அர்மான் மாலிக் 2011 ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மனைவியின் தோழி கிருத்திகா என்பவரை காதலித்து மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் இரண்டு மனைவிகளுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது இரண்டு மனைவிகளுடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த சிலர் வாழ்த்து தெரிவித்தாலும் பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment