ஜீ டிவியின் 'சரிகமபதநீ' டைட்டில் வின்னரான இலங்கையின் இளங்குயில்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Monday,December 18 2023]

சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடந்த நிலையில் அதில் ஸ்ரீநிதி என்ற சிறுமி டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்றும் அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் விஜய் டிவியை அடுத்து ஜி டிவியில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த சரிகமபதநி நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று நடந்த நிலையில் இதில் இலங்கை சேர்ந்த சிறுமி டைட்டில் பட்டம் பெற்றுள்ளார் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜீ டிவியில் அர்ச்சனா தொகுத்து வழங்கிய ’சரிகமபதநி’ என்ற பாட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நேற்று பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த சீசனில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிசா என்பவர் தான் டைட்டில் பட்டதை வென்றார். இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்து டைட்டில் பட்டம் வெல்லும் முதல் சிறுமி இவர்தான் என்று பெருமை அவருக்கு உண்டு. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிசாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கில்மிசாவுக்கு 10 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை ருத்ரேஷ், மூன்றாவது இடத்தை சஞ்சனா ஆகியோர் பிடித்தனர் என்பதும் இருவருக்கும் தலா 2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு எப்போது? இசையமைப்பாளர் மாற்றமா?

 ஜெயம் ரவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு அரவிந்த்சாமி

மாயா, பூர்ணிமா ஒண்ணா இருக்கக்கூடாது.. திடீரென போர்க்கொடி தூக்கும் விசித்ரா..!

பிக் பாஸ் ஏழாவது சீசனில் முதல் நாளிலிருந்து  மாயா மற்றும் பூர்ணிமா  ஒன்றாக இருந்து வருகிறார்கள் என்பதும் இவர்களுடைய கேங்கில் மேலும் சிலர் இருந்து வருவதை அடுத்து பலர் பாதிக்கப்பட்டனர்

'தளபதி 69' படத்தில் இந்த கூட்டணியா? முதல்முறையாக விஜய்யுடன் இணையும் மாஸ் இயக்குனர்..!

 தளபதி விஜய் நடித்து வரும் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் இந்த படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் உதயநிதியிடம் நிவாரண நிதி கொடுத்த 'டிமாண்டி காலனி 2' படக்குழு.. எத்தனை லட்சம்?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திரை உலகினர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர் என்பதை

இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. தங்கக்காப்பு பரிசளித்து வாழ்த்திய ஹரிஷ் கல்யாண்..!

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனருக்கு தங்க காப்பு பரிசளித்த ஹரிஷ்