தமிழ் மட்டும் வெள்ளக்காரன் மொழியா இருந்திருந்தா?...'ழகரம்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Tuesday,December 25 2018]

ஈரம், அதிதி, அனந்தபுரத்து வீடு உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் நந்தா ஹீரோவாக மீண்டும் நடித்து வரும் திரைப்படம் 'ழகரம்'. தமிழுக்கு மட்டுமே சிறப்பு எழுத்தாக இருக்கும் 'ழ' எழுத்தில் டைட்டிலாக கொண்ட இந்த படம் ஒரு புதையலை தேடும் ஒரு இளைஞர் கூட்டம் ச்ந்திக்கும் பிரச்சனைதான் கதை

'ழகரம்' படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'தமிழ் மட்டும் வெள்ளக்காரன் மொழியா இருந்திருந்தா இந்நேரம் இந்த மொழியை உலகம் முழுவதும் பேச வைத்திருப்பான்' என்ற வசனம் தமிழின் சிறப்பை எடுத்து கூறுகின்றது.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற ப்ராஜெக்ட் ஃ’ என்ற நாவலின் தழுவலில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அதிசயப் புதையலை தேடிச் செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் வரலாற்று சின்னங்கள் அதிகம் உள்ள மகாபலிபுரம், தஞ்சை, கோவை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

தரண்குமார் இசையில், க்ரிஷ் இயக்கத்தில் ஜோ பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவில் வெங்கட் லட்சுமணன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கதீர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

More News

விஜய்சேதுபதியிடம் வாழ்த்து பெற்ற நந்திதா-நர்மாதா

விஜய்சேதுபதியுடன் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களில் நடித்த நடிகை நந்திதா தற்போது 'நர்மதா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் இணையத்தில் வைரலாகும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' என்ற அடல்ட் காமெடி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி இளசுகளின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா படக்குழு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிக சினிமா வாய்ப்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா தான்.

முகம் பார்க்காத முகநூல் காதலனுக்காக பெற்ற தாயை கொலை செய்த கல்லூரி மாணவி

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் முகம் பார்க்காத முகநூல் காதலனுக்காக பெற்ற தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுதம் மேனன் நீக்கம், பார்த்திபனுக்கு புதிய பதவி: தயாரிப்பாளர் சங்கத்தில் அதிரடி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர் செயற்குழு கூட்டம் நேற்று சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது