close
Choose your channels

மீண்டும் இணையத்தில் வைரலாகும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

Tuesday, December 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து'  என்ற அடல்ட் காமெடி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி இளசுகளின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் யாஷிகா ஆனந்த் புகழ் பெற்று, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் ஹிட்டான இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 'சிகாட்டி காடிலோ சித்தகொடுடு' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் தெலுங்கிலும் இயக்கி வருகிறார்.

அதேபோல் தமிழில் இசையமைத்த பாலமுருகன் பாலு இசையில், பாலு ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை புளூகோஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் விரைவில் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.