close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீனியர் காமெடி நடிகர்

Monday, April 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் சீனியர் காமெடி நடிகர் சார்லி இணைந்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் கதை உணவு கலப்படம் சம்பந்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பாளாராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.