close
Choose your channels

அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்து வருவதால் இதுகுறித்து புகார் அளிக்க அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் முறையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் நாளை கவர்னர் சென்னை வரவுள்ளதாகவும், அதிமுக எம்.எல்.ஏக்களை அவர் சந்திக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை அடுத்து அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் எம்பிக்கள் டெல்லி திட்டமிட்டபடி டெல்லி செல்கின்றனர்.

மும்பையில் இருந்து சென்னைக்கு நாளை பிற்பகல் ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வரவுள்ளதாகவும், அதன்பின்னர் அவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது குறித்து முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.