close
Choose your channels

தமிழில் மட்டும் தான் த்ரிஷா.. தெலுங்கில் ஆட்டம் போடுவது இந்த பிரபல நடிகையா? 'கோட்' படத்தின் மாஸ் தகவல்..!

Monday, April 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாகவும் அவருக்கு ஒரு சில காட்சிகளும் இருப்பதாகவும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் தகவல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக இருக்கும் நிலையில் தமிழில் மட்டும் தான் த்ரிஷா நடனமாடிய காட்சி இடம்பெறும் என்றும் தெலுங்கில் இன்னொரு பிரபல நடிகையை நடனம் ஆட வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

தற்போது தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா தான் ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடலுக்கு நடனமாட இருப்பதாகவும் விரைவில் அவரது சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் நடன காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் ‘கோட்’ படத்தின் செய்திகள் கசிந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment