close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானின் இயக்குனர் அனுபவம் குறித்த வீடியோ விருந்து

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முதன்முதலில் Le Mask என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் தளத்தில் செயல்படும் விதம் குறித்த காட்சிகள் உள்ளன.

சாய் ரஹ்மானுடன் இணைந்து திரைக்கதை எழுதி, இயக்கம் மற்றும் இசையமைப்பு பொறுப்பையும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுள்ள இந்த படம், முழுக்க முழுக்க இத்தாலி தலைநகர் ரோம் நகரில் படமாக்கப்பட்டுள்ளது. யாரும் இல்லாத அனாதை ஒருவர் இசையுலகில் ஜொலிப்பது எப்படி என்பது குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நோரா அர்நெஸ்டர், கை பர்னட், முனிரியா கிரேஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இசையுலகில் உலக அளவில் ஜொலித்த ஏ.ஆர்.ரஹ்மான், இசை நாயகனை வைத்து இயக்கியுள்ள இந்த படம் அவருக்கு இயக்குனர் உலகிலும் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்பது இந்த வீடியோவை பார்த்தாலே அனைவருக்கும் புரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.