close
Choose your channels

நயன்தாராவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மிகப்பெரிய உதவி

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'டோரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மாஸ் ஹீரோ இன்றி, பெரிய டெக்னீஷியன் இன்றி கோடிகளை இந்த படம் குவித்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நயன்தாரா என்பதில் மாற்று கருத்தில்லை
இந்நிலையில் நயன்தாரா நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'அறம்' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. புரட்சிகரமான கலெக்டர் கேரக்டரில் நடித்துள்ள நயன்தாராவை திரையில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இது நயன்தாராவுக்கு ரஹ்மான் செய்யும் மிகப்பெரிய உதவியாக கருதப்படுகிறது.
நயன்தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சுமி, ராமச்சந்திரன் துரைராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மீஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.