close
Choose your channels

அஜித் மகனுக்கும் சத்யராஜ் பேரனுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை.. வைரல் வீடியோ..!

Wednesday, April 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் மகனுக்கும் சிபிராஜ் மகனுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தல அஜித் மகன் ஆத்விக் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் இந்த சிறு வயதிலேயே அவருக்கு கால்பந்து விளையாட்டில் மிகுந்த நாட்டம் உள்ளது என்பது தெரிந்தது. அஜித்தும் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கால்பந்து பயிற்சி பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார் என்பதும் வருங்காலத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த கால்பந்து வீரராக வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் மகன் போலவே சத்யராஜ் பேரனும் சிபிராஜ் மகனுமான தீரன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வத்தில் உள்ளதாக தெரிகிறது. இன்று சிபிராஜ் மகன் தீரன் தனது 11வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பள்ளியில் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடும் வீடியோவை வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்றைய கால இளைஞர்கள், குழந்தைகள் பலர் கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில் அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அஜீத் மகனும் சிபிராஜ் மகனும் கால்பந்து விளையாட்டில் பெரிய வீரராக வர ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment