close
Choose your channels

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் மகேஷ்பாபு: ஏ.ஆர்.முருகதாஸ்

Sunday, September 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், 'எனக்கு மீண்டும் மகேஷ்பாபுவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர் நடிப்பில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான 'மூன்று முகம்' படத்தின் ரிமேக்கை இயக்க வேண்டும் என்பது எனது விருப்பம்' என்று தெரிவித்தார். 

கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான 'மூன்று முகம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி நிலையில் இந்த படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. தெலுங்கில் 'முகுரு மூங்குலு' என்ற டைட்டிலில் சோபன்பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'கஜினி' இந்தி படத்தை இயக்கியபோது அமீர்கான் அவர்களிடம் இருந்த தொழில்பக்தியை தான் மகேஷ்பாபுவிடம் பார்த்ததாகவும், இந்திய சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி அனைத்தும் அவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் டிரைலர் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், இந்த படம் ஒரு ஸ்டைலிஷான ஆக்சன் படமாக இருக்கும் என்பதற்கு தான் உறுதியளிப்பதாகவும் இயக்குனர் மேலும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.