close
Choose your channels

நயன்தாரா'வின் 'இமைக்கா நொடிகள்' டீசர் விமர்சனம்

Thursday, May 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், அந்த பட்டியலில் இணையும் இன்னொரு திரைப்படம் தான் இந்த 'இமைக்கா நொடிகள்'

நேற்று இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்த இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் இன்று இந்த படத்தின் 69 நொடிகள் டீசர் வெளியாகியுள்ளது.

'பில்லா' படத்திற்கு பின்னர் நயன்தாரா முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் நாயகியாகவே இந்த படத்தில் மாறியுள்ளார் என்பது இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது. மிரட்டல்கள், தொடர் கொலைகள், துப்ப்பாகி வெடிச்சத்தம் என சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லுக்கு இந்த படத்தில் குறைவில்லை என்பது தெரியவருகிறது.

இந்த டீசரை பார்க்கும்போது அதர்வா இந்த படத்தின் நெகட்டிவ் ரோலி நடித்திருக்கலாம் என்ற யூகம் ஏற்பட்ட போதிலும் படம் வெளிவந்த பின்னர்தான் இதுகுறித்து உறுதியாக கூறமுடியும்.

அஜய்ஞானமுத்துவின் ஆக்சன் காட்சிகள், ராஜசேகரின் கேமிரா, ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை, புவன் ஸ்ரீனிவாசனின் கச்சிதமான எடிட்டிங் என அனைத்தும் சிறப்பாக இந்த டீசரில் அமைந்துள்ளதால், இந்த படம் நயன்தாராவின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.