Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

பாண்டி வேண்டிய ஆசி

IndiaGlitz [Thursday, December 05, 2013]
Comments
பிளாக் பாண்டி தனது பல வருட காதலியை இப்போதுதான் கை பிடித்திருக்கிறார். இந்த திருமணத்திற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் போயிருக்க வாய்ப்பில்லை. ரசிகர்களும் சென்றிருக்க முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் ஓராயிரம் ஆசிர்வாதத்தை பெற்றார் அவர். எப்படி? இவர் காமெடியனாக நடித்திருக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தம்பதி கமேதராக வந்திருந்தார் பாண்டி. மேடையில் ஏறியவர், எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு. உங்க ஆசிர்வாதம் எங்களுக்கு வேணும் என்று கூறிவிட்டு, அப்படியே தனது மனைவியுடன் சாஷ்டாங்கமாக கூட்டத்தை நோக்கி காலில் விழ, அத்தனை பேரும் எழுந்து நின்று ஆசிர்வதித்தார்கள்.

 
 இந்த ஆசிர்வாதம் அவரை சினிமாவுலகில் ஒரு பெரிய இடத்திற்கு கொண்டு சேர்க்குமல்லவா? சரி, படத்தின் பாடல்கள் எப்படி. இந்த படத்தை எடுக்க தயாராகும்போதை தரை டிக்கெட் மாஸ் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. இயக்குனர் கோபி உத்தரவின் பேரில், சரி குத்து குத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. அவரது ஃபாஸ்ட் பி.ஜி.எம்முக்கு அங்காடி தெரு மகேஷும் ஆருஷியும் ஆடியதில் வியப்பொன்றுமில்லை. ஆட்டத்தை பொறுத்தவரை அப்பாவியான கஞ்சா கருப்பும் குத்தோ குத்தென குத்தியிருப்பதுதான் வியப்பு. 




ஹன்சிகாவை சீக்கிரம் அனுப்பணும்



Other NEws

ஹன்சிகாவை சீக்கிரம் அனுப்பணும்

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.