1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

யுவனுக்காக இரண்டரை லட்சம் பூக்க&

IndiaGlitz [Wednesday, August 28, 2013]
Comments

ஆணானப்பட்ட இசைஞானி இளையராஜாவே தான் இசையமைத்த பாடல்களை எப்படி பாடலாக்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்க விரும்புவதில்லையாம். ஏனென்றால் மிக அழகான பாடல்களை கூட காட்சியமைப்பின் மூலம் சிதைத்துவிடுவார்கள் சில இயக்குனர்கள். எதற்காக பார்ப்பானேன், மனம் நோவானேன் என்கிற பெருந்தன்மையின் காரணமாகதான் இதற்கெல்லாம் ஆசைப்படுவதில்லை அவர்.

ஆனால் அவரது மகன் யுவன், தான் இசையமைத்த ஒரு பாடலுக்கு மட்டும் அதை எப்படி படமாக்கினார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தாராம் படக்குழுவினரிடம். வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெறும் வாங்கப்பா... வாங்கண்ணே... வாங்கத்தே... வா மாமா... என்றொரு பாடல் கல்யாண கலாட்டாவுக்காக உருவாக்கப்பட்டதாம். இதை எந்தளவுக்கு கிராண்டியராக எடுப்பார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாராம் அவர். யுவன் கேட்டுவிட்ட பிறகு சிம்பிளாக எடுக்க முடியாதல்லவா? இந்த பாடல் காட்சியில் பயன்படுத்துவதற்காகவே சுமார் இரண்டரை லட்ச ரூபாய்க்கு பூக்கள் வாங்கப்பட்டதாம். கோயம்பேடு பூ சந்தையே அப்படியே ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துருக்குமோ?
MGR bags U certificate

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 MGR bags U certificate
 Dhanush-KV Anand shoot to commence Sep2
 'Mundasupatti' shoot commences
 Siva Karthikeyan Visits Theatres Near to You
 Kamal Hassan and SRK Together
 Simbu Dhanush to Share the Screen
 Another problem awaits Thalaivaa producer
 Ivan Vera Mathiri to light up this Diwali
 Kollywood Urges to Go the Arab Way
 Ilayaraja Composes in Public
 Lakshmi Rai Rides Super Bikes
 Hansika in Bigg Boss?
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.