close
Choose your channels

ரஜினி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்: தனுஷ்

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்களை சந்தித்தபோது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் சுனாமியை கிளப்பிவிட்டது. அந்த சுனாமி இன்று வரை சுழன்றடித்து வருகிறது. தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை ரஜினியின் அரசியல் முடிவை விமர்சிக்காதவர்களே இல்லை என்று கூறும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து தனுஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது: 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசியல் பற்றிய முடிவு மட்டுமல்ல எந்த முடிவாக இருந்தாலும் ரஜினிகாந்த் எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த படத்தின் டைட்டிலில் அரசியல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.