close
Choose your channels

சிவா-சிவகார்த்திகேயன் கூட்டணி இணையுமா?

Friday, October 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடிப்பில் 'வேதாளம்' படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில், அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறுத்தை சிவா கூறிய கதை ஒன்று நடிகர் சிவகார்த்திகேயனை கவர்ந்துள்ளதாகவும், விரைவில் சிவா-சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஒரு படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.

'ரஜினிமுருகன்' படத்தை அடுத்த சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.

சிவா-சிவகார்த்திகேயன் இணையும் இந்த படம் ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜீத்தே மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இன்னொரு படத்தில் நடிக்க விரும்புவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மீண்டும் அஜீத்துடன் சிறுத்தை சிவா இணைந்தால் சிவா-சிவகார்த்திகேயன் திரைப்படம் இன்னும் தள்ளிப்போகவும் வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.
.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.