close
Choose your channels

SIIMA விருது 2017: மீண்டும் டபுள் விருது பெற்ற நயன்தாரா

Sunday, July 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தேசிய விருதுக்கு அடுத்தபடியாக மதிப்புமிக்க விருதாக கருதப்படும் இந்த விருதுகளை திரையுலகினர் பெரிதும் மதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை1 ஆகிய இரண்டு நாட்கள் அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய திரையுலகின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருது வழங்கும் விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். 'இருமுகன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்கு சிறந்த தமிழ் நடிகைக்கான விருதையும், 'புதிய நியமனம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த மலையாள நடிகை என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் நயன்தாரா, 'நானும் ரெளடிதான் மற்றும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' ஆகிய படங்களுக்காக இரண்டு விருதுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.