close
Choose your channels

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததை அடுத்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் தயாராகிவிட்டதாகவும், இந்த அமைச்சரவை பட்டியலில் ஏற்கனவே ஓபிஎஸ் தலைமையில் இருந்த அமைச்சர்களில் மாஃபா பாண்டியராஜன் தவிர அனைவரும் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
மேலும் புதிய அமைச்சரவை பட்டியலுடன் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அமைச்சரவை பட்டியலை கொடுத்தார். இதனையடுத்து அமைச்சரவை பட்டியலில் உள்ளவர்களுக்கு இன்று மாலை கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.