close
Choose your channels

மனைவி ப்ரியா, நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் ஜாலி கொண்டாட்டத்தில் அட்லி.. அப்படி என்ன விசேஷம்?

Thursday, April 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அட்லி தனது மனைவி ப்ரியா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட சிலருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி, சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’ஜவான்’ படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறது என்பதும் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

’பேபி ஜான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அட்லி மற்றும் படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் கேக் வெட்டி ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

அட்லி, ப்ரியா அட்லீ, கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உள்பட பலர் இந்த வீடியோவில் உள்ள நிலையில் நேற்று படப்பிடிப்பு முடிவடைந்த நிகழ்வு மட்டுமின்றி வருண் தவான் பிறந்தநாள் என்பதால் நான் படக்குழுவினர் அனைவரும் இரட்டை சந்தோஷத்தை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.