close
Choose your channels

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாகும் ஜெய் நாயகி

Saturday, June 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நாயகன் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமகியுள்ளார் என்பதை சமீபத்தில் பார்த்தோம்.

நாகசைதன்யா, தமன்னா நடித்த '100% லவ்' படத்தின் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நாக சைதன்யா வேடத்தில் நடிக்க தமன்னா வேடத்தில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் லாவண்யா திரிபாதி முன்னணியில் இருந்த நிலையில் தற்போது ஹேபா பட்டேல் இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான இவர் தமிழில் ஜெய் நடித்த 'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் '100% லவ்' படத்தை இயக்கிய B.சுகுமார் தயாரிக்கும் இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் சந்திரமெளலி இயக்கவுள்ளார். டட்லி ஒளிப்பதிவில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.