close
Choose your channels

என் தந்தை பிச்சை எடுப்பதை கண்ணால் பார்த்தேன். விஷால் உருக்கமான பேச்சு

Monday, March 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அனைத்து தயாரிப்பாளர்களும் ஆவேசமாக முந்தைய நிர்வாகிகளின் இயலாமையை ஆவேசமாக விவரித்த நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் உருக்கமாக பேசினார். விஷால் பேசியவதாவது:

இந்த தேர்தலில் இந்த புதிய அணி இங்கு வந்திருப்பதரக்கான காரணம் நல்லது செய்வதற்காக தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. நலிந்த என்ற ஒரு பிரிவை போக்குவதற்காக தான் இந்த அணி இங்கு அமர்ந்துள்ளார்கள். தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும்.

தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடத்தில் நடக்காததை நடத்தி காட்ட வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் தான் நான் இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இந்த அணி சார்பாக நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எனக்கு தலைவர் என்ற விஷயம் எப்போது ஞாபகம் வரும் என்றால் கையெழுத்து போடும் போது மட்டும் தான் ஞாபகம் வரும். மற்றபடி எனக்கு அது ஞாபகம் வராது. நான் தயாரிப்பாளர் சங்கத்தை முன்னேற்ற தான் வந்துள்ளேன். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் இந்த திரையுலகம் நன்றாக இருக்கும் என்பது தான் உண்மை. திரையுலகம் நன்றாக இருந்தால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்.

நடிகர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகளோடு இணைந்து நாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களை எல்லாம் செய்துள்ளோம். அதே போல் நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் நடிகர் சங்க கட்டிட வேலை துவங்கவுள்ளது. நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம்.

நான் என்னுடைய தந்தையிடம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறியதும் என்னுடைய தந்தை எதற்காக நிற்க போகிறாய் என்று கேட்டார். என்னுடைய தந்தை 'ஐ லவ் இந்தியா' என்ற படத்தை எடுத்தார். என் தந்தை 'மகாபிரபு' போன்ற வெற்றி படங்களை எடுத்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு லேபில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன். அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்தது தான் என்றார். அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன். நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம். என்னுடைய தந்தைக்கு நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்காது.

இவ்வாறு ஆவேசமாக நடிகர் விஷால் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.