close
Choose your channels

இந்த வருட பிறந்த நாள் உண்மையிலேயே விஜய்க்கு ஸ்பெஷல்தான்!

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளை வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அன்றைய தினம் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை திரையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ஜூன் 22ஆம் தேடி 'தலைவா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. அதேபோல் பல திரையரங்குகளில் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி', 'போக்கிரி' உள்பட பல திரைப்படங்கள் சிறப்பு காட்சிகளாக திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு தமிழ் நடிகரின் பிறந்த நாளுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள திரையரங்கில் சிறப்புக்காட்சி திரையிடப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் 'துப்பாக்கி' படம் ஜூன் 22ல் திரையிடப்படவுள்ளதாகவும், இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இணையதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ் நடிகர்களை வெறுக்கும் கர்நாடக மாநிலத்தில் கூட விஜய்யின் பிறந்த நாளுக்காக சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் உண்மையிலேயே விஜய்க்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் பிறந்த நாளாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.