close
Choose your channels

100 ஆண்டு சினிமா வரலாற்றில் 'கபாலி' செய்த சாதனை

Friday, March 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல், மொத்த வசூல் ஆகியவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வசூல். ஒருசிலர் இந்த படம் தோல்வி என்றும், இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என்று கூறி வந்தாலும் இதுவொரு மாபெரும் வெற்றிப்படம் என்பதுதான் உண்மை நிலவரம்.

இந்நிலையில் 'கபாலி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 225 நாட்கள் ஆகியுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.11,42,44,715 வசூலாகியுள்ளது. 100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் சென்னையில் இவ்வளவு பெரிய தொகை வசூலான படம் 'கபாலி' மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

'கபாலி'யின் இந்த சென்னை வசூலை இப்போதைக்கு வேறு படங்கள் முறியடிக்குமா? என்பது சந்தேகமே. ஒருவேளை ரஜினியின் அடுத்த படமான '2.0' திரைப்படம் இந்த வசூலை முறியடிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.