close
Choose your channels

கார்த்தியின் அடுத்தடுத்த 3 படங்களின் திட்டங்கள்

Saturday, June 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் கார்த்தி தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார். 'சதுரங்க வேட்டை' இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் ஒருசில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து கார்த்தி, முதன்முதலாக விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ள 'கருப்புராஜா வெள்ளை ராஜா' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரபுதேவா மிகக்குறுகிய காலத்தில் இந்த படத்தை இயக்கி முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படமும் இவ்வருட இறுதிக்குள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கி அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.