close
Choose your channels

பிரபல பாடலாசிரியர் இயக்கும் 2வது படம்

Thursday, July 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான ' வெயில்', தனுஷின் 'ஆடுகளம்', ஜிவி பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் ஏகாதேசி அவர்கள் ஏற்கனவே 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' என்ற படத்தை இயக்கியிருந்தார்
இந்த நிலையில் பாடலாசிரியர் ஏகாதேசி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளிவந்துள்ளது. 'கனகாம்பரம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 'தீபன்' என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் வேல ராமமூர்த்தி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
ஜே.கே.தாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்திற்கு மூவேந்தர் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் 'கும்கி' ஒளிப்பதிவாளர் சுகுமார் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத்குமார் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.