close
Choose your channels

ஜப்பான் தளபதி ரசிகர்களுக்கும் தீபாவளி விருந்து

Tuesday, October 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் அவரது ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக நாளை முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதிலும் பெருவாரியான நாடுகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஜப்பானிலும் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆம், 'மெர்சல்' திரைப்படம் ஜப்பானில் வெளியாகும் தகவலை உறுதி செய்யும் வகையில் 'மெர்சல்' திரைப்படத்தின் ஜப்பான் மொழி போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட வரலாற்றில் ஜப்பானில் முதல்முறையாக டோக்கியோ, எபினா, ஒசாகா, நாகோயா என நான்கு நகரங்களில் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து ஜப்பான் நாட்டில் தளபதியின் ரசிகர்கள் அதிகளவு இருப்பதால் அங்கும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி ஜப்பானில் உள்ள தளபதி ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்து என்பதை சொல்லவும் வேண்டுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.