close
Choose your channels

என்னுடைய வெற்றிக்கு என் நண்பர்களே காரணம். விஷ்ணுவிஷால்

Saturday, July 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஷ்ணுவிஷால் நேற்று தனது பிறந்தநாளின்போது கொடுத்த பேட்டியில், 'தன்னுடைய உயர்வுக்கு காரணம் தனது நண்பர்களான விஷால், ஆர்யா, விக்ராந்த், உதயநிதி ஆகியோர்கள்தான் என்றும், அவர்கள் தனக்கு தக்க சமயத்தில் செய்த உதவியால்தான் இன்று தன்னால் ஒரு வெற்றி பெற்ற நடிகராக உங்கள் முன் நிற்க முடிந்ததாகவும் கூறினார். குறிப்பாக ஆர்யா தனக்கு அண்ணன் மாதிரி என்றும் தான் பிரச்சனையில் சிக்கியிருக்கும்போது முதலில் வந்து உதவி செய்பவர் என்றும் அவர் கூறினார்.


தன்னுடைய இயற்பெயர் விஷால் என்று கூறிய விஷ்ணு, 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் அறிமுகமானபோது விஷால் முன்னணி நடிகராக இருந்து வந்ததால், தன்னுடைய பெயரை விஷ்ணுவிஷால் என்று மாற்றியதாக கூறினார்.

தற்போது இடம் பொருள் ஏவல், கலக்குற மாப்ளே, போடா ஆண்டவனே என் பக்கம் மற்றும் வீர தீர சூரன் ஆகிய படங்களில் விஷணு நடித்து கொண்டிருக்கின்றார். இதில் விரைவில் இடம் பொருள் ஏவல் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து முதல்முறையாக நடித்துள்ள விஷ்ணு, தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியுடன் நீர்ப்பறவை படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.