close
Choose your channels

தனுஷின் முதல் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றி

Friday, April 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இளம் வயதிலேயே நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என முக்கிய துறைகளில் ஜொலித்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் துறையிலும் கால்பதித்துள்ளார். அவர் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி' வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் 'பவர் பாண்டி' திரைப்பத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். தனுஷ் இயக்கிய முதல் படமே 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது அவருக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதால் இந்த படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று தனுஷின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராஜ்கிரணின் சிறு வயது கேரக்டரில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் டிடி என்ற திவ்யதர்ஷினியும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.