close
Choose your channels

மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, March 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் கடந்த மாதமே வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்தை முதலில் தயாரித்த வேந்தர் மூவிஸ் மதனிடம் பைனான்ஸ் கொடுத்திருந்த போத்ரா என்பவர், தான் கொடுத்த பணம் திரும்பி வரவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு எதிராக போத்ரா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீசுக்கு இருந்த ஒரே தடை வெற்றிகரமாக நீங்கியது.
இதனையடுத்து படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இந்த படம் இம்மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. புதிய ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றும் தற்போது இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.