close
Choose your channels

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணிக்கு மீண்டும் ஒரு கெளரவம்

Thursday, July 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரில் கடந்த 71 வருடங்களாக சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்நிலையில் 72வது வெனிஸ் திரைப்பட விழா வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்படவிழாவில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் 72 வருட வெனிஸ் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படம் இந்த விழாவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த திரைப்படம் வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை' என்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தனுஷ்-வெற்றிமாறன் இணைந்த காக்கா முட்டை' தேசிய விருது மட்டுமின்றி பல சர்வதேச விருதுகளையும் வென்ற நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு கெளரவம் இந்த 'விசாரணை' படத்தின் மூலம் கிடைத்துள்ளது.

அட்டக்கத்தி தினேஷ், பிரதீஷ் ராஜ், ஆனந்தி, சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.